தமிழகம்

சிவகாசி 8 வயது சிறுமி கொலை வழக்கில் திருப்பம்! அசாம் இளைஞர் அதிரடி கைது!

Summary:

Assam young man arrest for killing 8 year child

சிவகாசி கொங்கலாபுரத்தைச் சேர்ந்த பட்டாசு தொழிலாளியின் 8வயது மகள் தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அவர் சமீபத்தில் மாலை பொது கழிப்பிடத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற நிலையில் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. 

 இந்நிலையில் பெற்றோர்கள் மற்றும் அவரது உறவினர்கள் அனைவரும் ஊர் முழுவதும் தேடியுள்ளனர். எங்கும் கிடைக்காத நிலையில் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் சிறுமி வீட்டின் அருகேயுள்ள முட்புதரில் சடலமாகக்  கிடந்துள்ளார். மேலும் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை மேற்கொண்டதில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை கண்டறிந்தனர்.

அதனைத் தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து சிறுமியை கொலை செய்த அசாம் மாநிலத்தை சேர்ந்த மஜீம் அலி  என்பவரை கண்டறிந்து கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement