தொலைதூரப் பேருந்து பயணங்கள் - அரசின் உத்தரவால் மக்கள் மகிழ்ச்சி..!

தொலைதூரப் பேருந்து பயணங்கள் - அரசின் உத்தரவால் மக்கள் மகிழ்ச்சி..!



as-per-government-order-government-buses-stop-private-h

அரசு தொலைதூர பேருந்து பயணிகளின் மகிழ்ச்சியால் அரசின் முடிவை மனதார பாராட்டி வருகின்றனர்‌.

தலைநகர் சென்னையில் இருந்து தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு தொலைதூர பேருந்துகள் அரசின் சார்பில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள் நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் சாலையோர உணவகங்களில் நின்று செல்வது வழக்கம். 

அந்த வகையில், அரசின் சார்பில் ஒப்பந்த பணிகள் கோரப்பட்டு செயல்பட்டு வந்த பல்வேறு உணவகங்களில் உணவு சரியில்லை, கழிவறை வசதி சரியில்லை என்று பல்வேறு தொடர் குற்றச்சாட்டுகள் இருந்தது. மேலும், ஒவ்வொரு பொருளின் விலையும் இரு மடங்கு அதிகமாக வைத்து விற்கப்படுவது தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. 

இந்த விஷயம் தொடர்பான புகார்கள் பல்வேறு வருடங்களாக நீடித்து வந்த நிலையில், அதற்கு ஒரு முடிவே கிடையாதா? என்ற ஒரு மன அழுத்தமும் பேருந்து பிரயாணிகளிடம் இருந்து வந்தது‌. இந்த நிலையில், சமீபத்தில் மாமண்டூர் தொலைதூர உணவகம் அரசால் தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து உளுந்தூர்பேட்டை மற்றும் விக்கிரவாண்டி பகுதிகளில் உள்ள தொலைதூரப் பேருந்து உணவக நிறுத்தம் இடங்களும் அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டது. 

tamilnadu

மேலும், மக்கள் புகார் கூறியுள்ள இடங்களில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்தால் அதனை திறக்க வழிவகை செய்வதாக அரசு அறிவித்தது. தற்போதைய நிலையில் பல்வேறு தனியார் உணவகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அங்கு அரசு பேருந்துகள் நின்று செல்ல வழிவகை செய்யப்பட்டது. தொலைதூர பேருந்துகளை கண்காணிக்க அதிகாரிகளும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்பேரில், தற்போது சென்னையில் இருந்து மதுரை, கோவை, கன்னியாகுமரி, செங்கோட்டை, தூத்துக்குடி போன்ற பல்வேறு நகரங்களுக்கு செல்லும் பேருந்துகள், தனியார் உணவகங்களில் நின்று செல்வதால் பேருந்து பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இடம்: உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடி.