நீண்ட நாட்களுக்கு பிறகு வீட்டிற்கு வந்த ராணுவ வீரர்.! பிரிந்து சென்ற மனைவி.!விரக்தியில் ராணுவ வீரர் எடுத்த விபரீத முடிவு.!army man suicide

காஞ்சிபுரம் மாவட்டம் வன்னியர் பேட்டை பகுதியில் வசிக்கும் செந்தில்குமார் என்பவர் ஒடிசாவில் இந்திய ராணுவ வீரராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு நதியா என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். செந்தில்குமார் கடந்த 15 நாட்களுக்கு முன் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளார். 

இந்தநிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நதியா தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் மனவேதனையில் இருந்துள்ளார் செந்தில்குமார்.

Army manஇதனால் மனமுடைந்த ராணுவ வீரர் செந்தில்குமார் நேற்று முன்தினம் மாலை, அவரது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த,  போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து செந்தில்குமாரின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.