ஜாதிவெறியர்களால் சுடுகாடு வரை வந்த ஜாதி - அரியலூரில் இப்படி ஒரு கொடுமை.. அதிர்ச்சி விபரம் உள்ளே.!

ஜாதிவெறியர்களால் சுடுகாடு வரை வந்த ஜாதி - அரியலூரில் இப்படி ஒரு கொடுமை.. அதிர்ச்சி விபரம் உள்ளே.!



ariyalur-near-village-casteism-issue

 

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கேளூர் கிராமத்தில், மருத்துவர், வண்ணார்கள் சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்காக சொந்தமாக சுடுகாடு ஏதும் இல்லை. அரசு சார்பில் அமைக்கப்பட்ட சுடுகாட்டில், இறுதிச்சடங்குகளை செய்ய யாவருக்கும் அனுமதி உண்டு என்ற நிலையில், மேற்கூறிய சமூகத்தை சேர்ந்தவர்கள் இறந்தால், அவர்களின் சடலத்தை எரிக்க விடாமல் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த 5 நாட்டமைதாரர்கள் என்ற ஜாதி வெறியர்கள் பிரச்சனை செய்து வருவதாக கூறப்படுகிறது. 

இதனால் நேற்று முன்தினம் கடும் மழை பெய்து, சுடுகாட்டின் அனைத்து பகுதிகளும் சகதியால் சூழப்பட்ட நிலையில், சுடுகாட்டை பயன்படுத்த அனுமதி இல்லாத காரணத்தால், அவர்கள் சகதிகளுக்கு நடுவே உடலை தகனம் செய்யும் பணிகளை மேற்கொண்டனர். 

அதேபோல, மழையின் காரணமாக உடல் எரியாது என்பதால், சொந்த செலவில் தற்காலிக அமைப்பையும் அவர்கள் ஏற்படுத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த கொடுமைகளுக்கு காரணமான அவ்வூரின் 5 முக்கிய புள்ளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள அவ்வூர் இளைஞர்கள், நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இனி சாலை மறியல் உட்பட போராட்டம் நடத்தவிருப்பதாகவும் அறிவுறுத்தியுள்ளனர். அந்த வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.

தங்களின் கிராமத்தில் உள்ள நாட்டாமைகளால் மட்டுமே இவ்வாறான பிரச்சனை ஏற்படுகிறது. ஊரில் உள்ள மக்கள் நல்லவர்களாக இருந்தாலும், நாட்டாமைகள் என்ற ஜாதி வெறியர்கள் காரணமாக இன்றளவும் இப்படியான சோகங்கள் தொடருவதாக வீடியோவில் பேசிய இளைஞர்கள் கொதித்தனர்.

விடீயோவின் அடிப்படையில் செய்தி பதிவிடப்பட்டுள்ளது; களநிலவரம் விசாரிக்கப்பட்டு வருகிறது..