அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
எடப்பாடி பழனிச்சாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை...!! அனுமதி அளித்த தமிழக அரசு..!!
அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த தமிழ் நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த அனுமதி கோரியது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது மருத்துவ கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு துறைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
முறைகேடு நடைபெற்றிருக்க முகாந்திரம் உள்ளதாகவும் எனவே, விசாரணை நடத்த வேண்டும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அனுமதி கோரியது. இந்நிலையில், தமிழக அரசு இந்த அனுமதியை அளித்துள்ளது.