அதிமுக பல இடங்களில் தோற்பதற்கு முக்கிய காரணமாக இருந்த அமமுக.! வெளியான முழு விவரம்.!

அதிமுக பல இடங்களில் தோற்பதற்கு முக்கிய காரணமாக இருந்த அமமுக.! வெளியான முழு விவரம்.!


ammk which was the reason for the admk defeat in many places


நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை விட கூடுதல் இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை பெற்று தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. திமுக 159 இடங்களிலும், அதிமுக 75 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்தநிலையில், திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் புதிய முதல்வராக வரும் 7ம் தேதி பொறுப்பேற்கவுள்ளார்.

இந்த நிலையில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பல இடங்களில் தோல்வி அடைந்ததற்கு அமமுக ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. மயிலாடுதுறை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட  காங்கிரஸ் வேட்பாளர் எஸ். ராஜ்குமார், பாமக வேட்பாளர் ஆ.பழனிசாமியை 2747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் இந்த தொகுதியில் அமமுக வேட்பாளர் 7282 வாக்குகளை பெற்றுள்ளார்.

 இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதியில் திமுகவின் கூட்டணி கட்சி வேட்பாளர் மா. சின்னத்துரை, அதிமுக வேட்பாளர் செ.ஜெயபாரதியை 12,721 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் இந்த தொகுதியில் அமமுக வேட்பாளர் ப.லெனின் 12,840 வாக்குகள் பெற்றுள்ளார்.

 ராஜபாளையம் தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.தங்கபாண்டியன், அதிமுக வேட்பாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை 3789 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் காளிமுத்து 7,623 வாக்குகளை பெற்றுள்ளார்.

 காரைக்குடி தொகுதியில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி, பாஜக வேட்பாளர் எச்.ராஜாவை 21,589 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி 44,864 வாக்குகளை பெற்றுள்ளார்.

 சங்கரன்கோவில் தொகுதியில் திமுக வேட்பாளர் ஈ.ராஜா, அதிமுக வேட்பாளர் ராஜலட்சுமியை 5354 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அமமுக வேட்பாளர் அண்ணாதுரை 22,676 வாக்குகளை பெற்றுள்ளார்.

 மன்னார்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா, அதிமுக வேட்பாளர் ராஜமாணிக்கத்தை 37,393 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் இந்த தொகுதியில் அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ் 40,481 வாக்குகளை பெற்றுள்ளார்.

 இதனையடுத்து தென்காசி தொகுதியில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எஸ்.பழனி, அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியனை 370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் அமமுக வேட்பாளர் எஸ்.முஹம்மது 9,944 வாக்குகள் பெற்றுள்ளார்.

 பாபநாசம் தொகுதியில் திமுகவின் கூட்டணி கட்சியான ம.ம.க வேட்பாளர் ஜவாஹிருல்லா, அதிமுக வேட்பாளர் கோபிநாதனை 16,273 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அமமுக வேட்பாளர் ரெங்கசாமி 19,778 வாக்குகளை பெற்றுள்ளார்.

 புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியில், திமுக வேட்பாளர் எஸ். ரகுபதி, அதிமுக வேட்பாளர் வைரமுத்துவை 919 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் அமமுக வேட்பாளர் முனியராஜு 1,426 வாக்குகளை பெற்றுள்ளார்.

 வாசுதேவநல்லூர் தொகுதியில், மதிமுக வேட்பாளர் திருமலைக்குமார், அதிமுக வேட்பாளர் மனோகரனை 2,367 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் அமமுக வேட்பாளர் தங்கராஜ் 13,376 வாக்குகளை பெற்றுள்ளார்.

 உத்திரமேரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கே.சுந்தர், அதிமுக வேட்பாளர் சோமசுந்தரத்தை 1,622 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அமமுக வேட்பாளர் ரஞ்சித் குமார் 7,211 வாக்குகள் பெற்றுள்ளார்.

 திருப்போரூர் தொகுதியில், திமுகவின் கூட்டணிக் கட்சியான விசிக வேட்பாளர் எஸ்.எஸ்.பாலாஜி, அதிமுக வேட்பாளர் ஆறுமுகத்தை 1,947 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அமமுக வேட்பாளர் கோதண்டபாணி 7,662 வாக்குகள் பெற்றுள்ளார்.

 நெய்வேலி தொகுதியில் திமுக வேட்பாளர் ராஜேந்திரன், பாமக வேட்பாளர் ஜெகனை 977 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் அமமுக வேட்பாளர் பக்தரட்சகன் 2,230 வாக்குகளை பெற்றுள்ளார்.

 திருவாடானை தொகுதியில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கருமாணிக்கம், அதிமுக வேட்பாளர் ஆணிமுத்துவை 13,316 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அமமுக வேட்பாளர் ஆனந்த் 32,074 வாக்குகளை பெற்றுள்ளார்.

 காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன், அதிமுக வேட்பாளர் ராமுவை 746 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அமமுக வேட்பாளர் ராஜா 1040 வாக்குகளை பெற்றுள்ளார்.

 முதுகுளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமியை 20,721 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அமமுக வேட்பாளர் முருகன் 19,699 வாக்குகளை பெற்றுள்ளார்.

 நாங்குநேரி தொகுதியில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மனோகரன், அதிமுக வேட்பாளர் கணேசராஜாவை 15,363 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் அமமுக வேட்பாளர் 30,596 வாக்குகளை பெற்றுள்ளார்.

 சாத்தூர் தொகுதியில் மதிமுக வேட்பாளர் ரகுராமன், அதிமுக வேட்பாளர் ரவிச்சந்திரனை 11,179 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் அமமுக வேட்பாளர் ராஜவர்மன் 32,916 வாக்குகளை பெற்றுள்ளார்.

 விருத்தாச்சலம் தொகுதியில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன், பாமக வேட்பாளர் கார்த்திகேயனை 862 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்தத் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் 25,908 வாக்குகளை பெற்றுள்ளார்.

 ஆண்டிபட்டி தொகுதியில் திமுக வேட்பாளர் மகாராஜன், அதிமுக வேட்பாளர் லோகிராஜனை 8,538 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் அமமுக வேட்பாளர் ஜெயக்குமார் 11,896 வாக்குகளை பெற்றுள்ளார்.

 தியாகராய நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதி, அதிமுக வேட்பாளர் சத்தியநாராயணனை 137 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் அமமுக வேட்பாளர் பரணீஸ்வரன் 782 வாக்குகளை பெற்றுள்ளார். மேலும், பல தொகுதிகளில் அமமுக கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது.