நடிகை அமலாபாலின் தந்தை திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..! சோகத்தில் ரசிகர்கள்..!

நடிகை அமலாபாலின் தந்தை திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..! சோகத்தில் ரசிகர்கள்..!


amala-paul-dad-died

அமலா பால் ஒரு தமிழ் சினிமாவின் முக்கிய திரைப்பட நடிகை ஆவார். சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக அறிமுகமான அமலா பால், மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் வெளிவந்த திரைப்படங்கள், அவரை நட்சத்திர நடிகையாக உயர்த்தியது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை அமலாபால், இயக்குநர் ஏ.எல். விஜய்யை காதலித்து கரம் பிடித்தார். பின் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலில், இருவரும் விவாகரத்து செய்துக் கொண்டு பிரிந்தனர்.

amala paul

இதனிஆயடுத்து நடிப்பில் முழு கவனம் செலுத்தி தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார் அமலாபால். இவர் தற்போது "அதோ அந்த பறவை" படத்தின் வெளியீட்டையொட்டி, அதன் புரோமோ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். இந்நிலையில், இன்று நடிகை அமலாபாலின் தந்தை திரு.பால் வர்கீஸ் திடீரென மரணமடைந்தார். மரணமடைந்த நடிகை அமலாபாலின் தந்தைக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.