#BREAKING: அதிமுகவில் பிளவா? இதுதான் உண்மை - எஸ்.பி. வேலுமணி பரபரப்பு பேட்டி..!



AIADMK SP Velumani Latest Pressmeet 22 May 2025

மக்கள் தீர்ப்பின் அடிப்படையிலேயே தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கப்பட்டது என அதிமுக முன்னாள் அமைச்சர் பேட்டி அளித்தார்.

செய்திகளில் உண்மை இல்லை:

சென்னை எம்.ஆர்.சி நகரில் இன்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், "நாங்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்ககவுள்ளதாகவும், அதில் ஏமாற்றம் எனவும் தினமும் செய்திகள் வெளியாகின்றன. நானும், சி.வி. சண்முகமும் பேசும்போது நாங்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்பதாக சொல்லவில்லை. தவெகவும் அதனை தெரிவித்து இருந்தது. ஆனால், ஒருசிலர் அமைச்சர்கள் ஏமாற்றம் என கூறுகிறார்கள். 

இதையும் படிங்க: #BREAKING: எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த ட்விஸ்ட்.. மொத்தமாக கலியாகப்போகும் அதிமுக?  

TN politics

பொதுக்குழு வேண்டும்:

எங்களைப்பொறுத்தவரையில் மக்களை தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். மக்களின் அடிப்படையிலேயே எங்களின் ஆதரவும் இருந்தது. எங்களுக்கு அதிமுக தோல்வியை சந்தித்ததை ஏற்றுக்கொள்கிறோம். அதனை சரிசெய்யும் முயற்சியில் நாங்கள் இறங்கியிருக்கிரோம். எங்களுக்குள் பிளவு இல்லை. கருத்து வேறுபாடு தான். அதனை பொதுக்குழு கூட்டி ஆலோசனை செய்வோம். அதற்காகவே முயற்சித்து வருகிறோம். 

TN politics

பதிலளித்துவிட்டோம்:

நாங்கள் பதவிக்காக இவ்வுளவும் செய்வதாக கூறுகிறது. அது உண்மையில்லை. எங்கள் மீதான சர்ச்சைக்கு நாங்களும், ஆளும் தவெக தரப்பும் பதிலளித்து விட்டது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சமூக வலைத்தளங்களில் தவறான எண்ணத்தை பரப்பி மக்களை குழப்புகிறார்கள். முதல்வரிடம் தொடர வேண்டிய அம்மா உணவகம், குடிமராமத்து, தாலிக்கு தங்கம் என பல திட்டங்கள் குறித்து கோரிக்கை வைத்துள்ளோம். திமுகவை எதிர்த்து நாங்களும், அவர்களும் ஒரேகோட்டில் பயணித்ததால் ஆதரவு தெரிவித்தோம். எங்களின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான். மீண்டும் அம்மாவின் ஆட்சி கண்டிப்பாக தமிழ்நாட்டில் அமைய வேண்டும். அதிமுக எங்களின் உயிர்" என பேசினார்.
 

இதையும் படிங்க: விஜயின் ஆட்சிக்கு எதிர்ப்பு? மௌனம் களைத்த மு.க. ஸ்டாலின்.. என்ன சொன்னார் தெரியுமா?