#BREAKING: எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த ட்விஸ்ட்.. மொத்தமாக கலியாகப்போகும் அதிமுக?  



Breaking: AIADMK MLAs Skip EPS Meet, Buzz Grows Over Possible Shift to TVK

தவெக கட்சியில் இணைய அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

திடீர் ஆலோசனை:

TVK VIjay: சென்னை எம்.ஆர்.சி நகரில் இருக்கும் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் இல்லத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில் தற்போது முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், சி.வி. சண்முகம், இசக்கி சுப்பையா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

இதையும் படிங்க: முன்னிலையில் தவெக.. எம்.ஜி.ஆர் காலத்துக்கு பின்.. தமிழக தேர்தலில் கவனம் ஈர்த்த விஜய்..!

பழனிசாமியை சந்திக்கவில்லை:

முன்னதாக, இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றிபெற்ற சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், அங்கு செல்லாமல் இவர்கள் தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

edappadi palanisamy

மூத்த தலைவர்கள்:

Tamil Nadu Politics 2026: வடதமிழ்நாடு, டெல்டா, கொங்கு மண்டலம், தென்மாவட்டம் என எடப்பாடி பழனிசாமியை சந்திக்காமல் அதிமுகவின் மூத்த தலைவர்கள் திடீர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு பின்னணியில் இருக்கும் முக்கிய எம்.எல்.ஏக்களை வைத்து ஏதேனும் அரசியல் நகர்வுகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பின்னடைவு?

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 47 பேர் சென்னை வந்துள்ள நிலையில், அவர்கள் யாரும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை. ஒருசிலர் மட்டுமே எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சென்று சந்தித்துள்ளனர். இதனால் அதிமுக மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கலாமா? என்ற அரசியல் கேள்வி எழுந்துள்ளது. 

edappadi palanisamy

திடீர் திருப்பம்:

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026 முடிவுகள் தொங்கு சட்டப்பேரவையாக இருந்தாலும், தமிழக வெற்றிக் கழக தலைமை பிற எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற்று வருகிறது. திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் தவெகவுடன் திடீரென கூட்டணி அறிவித்து விஜயை நேரில் சந்தித்து வாழ்த்தியது. தற்போது அடுத்தகட்ட அரசியல் மாற்றம் தமிழகத்தை கவனிக்க வைத்துள்ளது. 

என்ன ஆகப்போகிறது?

ஏற்கனவே அரசியல் விமர்சகர்கள் 2026 தேர்தலுக்குப்பின் அதிமுக, திமுகவின் நிலை மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கலாம் என கூறிவந்த நிலையில், அதனை உறுதிசெய்யும் வகையில் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் நடக்கின்றன. ஒருவேளை அதிமுக எம்.எல்.ஏக்கள் பலரும் திடீரென தவெக சென்றால், அது உறுதிசெய்யவும் வாய்ப்புகள் உண்டு. இந்த அரசியல் நகர்வுகளுக்கு ஒருசில நாட்களில் முடிவு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தவெகவுடன் கைகோர்க்கும் மதிமுக? பளிச் பதில் அளித்த வைகோ.!