ரெய்டு பயத்தில் அண்ணாவை விட்டுக்கொடுத்த திமுக - செல்லூர் ராஜு பாய்ச்சல்.!
மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் சி.என் அண்ணாதுரையை முன்னிறுத்தி அதிமுக - பாஜக இடையே பிரச்சனை நடந்து வருகிறது.
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளின் காட்டமான கருத்துக்களுக்கு, பாஜக தலைவர் அண்ணாமலையும் தனது அதிரடி பதில்களை தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், இந்த விஷயம் குறித்து பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு, "கூட்டணியில் இருக்கும் நாங்களே பாஜகவை கண்டு பயமில்லாது விமர்சனம் செய்து வருகிறோம்.
அண்ணா விவகாரத்தில் திமுகவினர் உண்மையில் கொதித்தெழுந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் மேலிடத்தில் இருந்து சோதனை வந்துவிடுமோ என அச்சத்தில் இருக்கிறார்கள்" என கூறினார்.