100 யூனிட் இலவச மின்சார திட்டம் விரைவில் இரத்து? - முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேச்சு.. தமிழக மக்களின் தலையில் பேரிடி.!



AIADMK KP Anbazhagan Speech about Free Electricity Scheme

அதிமுக அரசு கொண்டு வந்த முக்கியமான திட்டங்களை திமுக அரசு முடக்கி வருகிறது. விரைவில் இலவச மின்சார திட்டமும் இரத்தாகும் என முன்னாள் அமைச்சர் பேசினார்.

தமிழகத்தில் மின்கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, தர்மபுரியில் முன்னாள் அமைச்சர் & எம்.எல்.ஏ கே.பி அன்பழகன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. 

அவர் பேசுகையில், "கடந்த 10 ஆண்டுகளாக ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படவில்லை. திமுக அரசின் ஆட்சியில் மின்கட்டணம், சொத்துவரி என ஒவ்வொன்றாக உயர்த்தப்படுகிறது. 

AIADMK

மக்களிடம் பொய்யான வாக்குறுதியை அளித்து அவர்களை நம்பவைத்து திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. தர்மபுரி மக்கள் திமுகவின் பொய்யான வாக்குறுதிக்கு மதிமயங்கவில்லை. 

இங்கு இருக்கும் 5 தொகுதியும் அதிமுக கூட்டணியே வெற்றி பெற்றது. தாலிக்கு தங்கம், மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம் போன்றவை முடக்கப்பட்டு வருகின்றன. விரைவில் 100 யூனிட் இலவச மின்சாரமும் இரத்து செய்யப்படும் வாய்ப்புகள் இருக்கின்றது" என்று பேசினார்.