
முதல்வரின் துபாய் பயணம் குறித்து காட்டமான விமர்சனத்தை முன்வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர்.!
அன்று திமுக அதிமுக அரசை ஏளனம் செய்தது. ஆனால் இன்று பல்வேறு குளறுபடிகள் மு.க ஸ்டாலினின் துபாய் பயணத்தில் நடந்துள்ளது என்று முன்னாள் அதிமுக அமைச்சர் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தனது குடும்பத்தினர் மற்றும் அமைச்சருடன் தனி விமானம் மூலமாக துபாய்க்கு சென்றார். அங்கு லூலூ குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, ரூ.3000 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளார். முதல்வரின் பயணம் தொடர்பான பல்வேறு சர்ச்சை கேள்விகளும் உள்ளன.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேசுகையில், "தமிழ்நாடு முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பணியாற்றியபோது, துபாய் சென்று ரூ.4000 கோடி அளவில் முதலீடை ஈர்த்து வந்தார். அன்று திமுக அதிமுக அரசை ஏளனம் செய்தது.
இன்று அவர்கள் சென்று ரூ.3000 கோடியில் முதலீடு ஈர்த்து வந்துள்ளதாக கூறுகிறார்கள். ஆனால், அவர்களின் பயணத்தில் பல்வேறு குளறுபடிகள் மட்டுமே புகாராக வருகிறது. அனைத்தையும் மக்கள் கவனிக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement