தமிழகம் இந்தியா

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் முறைகேட்டில் மேலும் 5 மாணவர்கள்! சி.பி.சி.ஐ.டி போலீஸாரின் அதிரடி!

Summary:

again 5 students in neet exam fraud

சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா என்பவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி, தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்ததாக என புகார் எழுந்தது. இது தொடர்பாக கல்லூரி முதல்வர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இதனால், உதித் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினருடன் தலைமைமறைவானார். 

இதனையடுத்து தேனி போலீசார் தனிப்படை அமைத்து உதித் சூர்யா மற்றும் அவருடைய குடும்பத்தினரை தீவிரமாக தேடிவந்தனர். இந்தநிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணைக்கு மாற்ற உத்தரவிடபட்டது. இந்தநிலையில் திருப்பதியில் உதித் சூர்யா மற்றும் அவரது பெற்றோரை கைது செய்த தனிப்படை காவல்துறையினர் சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து இதனைத் தொடர்ந்து உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரிடமும் சிபிசிஐடி காவல்துறையினர் இன்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் மகனை மருத்துவராக்க வேண்டும் என்ற ஆசையில் ஆள்மாறாட்டம் செய்ததாக உதித் சூர்யாவின் தந்தை ஒப்புக்கொண்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் உதித் சூர்யா அவரது தந்தை ஆகிய இருவரையும் சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து உதித் சூர்யாவின் ஹால்டிக்கெட்டில் உள்ள புகைப்படத்தை வைத்து தேர்வு எழுதிய நபர் யார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை நடத்திய விசாரணையில் மேலும், 5 பேர் இதுபோன்று ஆள்மாறாட்டம் செய்து அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் கிடைத்து உள்ளது. அதன்பேரில், தமிழகத்தில் மேலும் சில இடங்களிலும் விசாரணை நடத்த இருக்கிறோம். எனவே மேலும் சிலர் இதில் சிக்க வாய்ப்பு உள்ளது  என சி.பி.சி.ஐ.டி போலீஸார் தெரிவித்துள்ளனர்.


Advertisement