குடித்து விட்டு வந்து அடாவடி.. பேருந்து ஓட்டுனருக்கு கத்தி குத்து... கோவையில் பரபரப்பு..!after-getting-drunk-and-getting-drunk-he-stabbed-the-bu

மேட்டுப்பாளையத்தில் போதையில் இருந்த ஒருவர் அரசு பஸ் டிரைவரை கத்தியால் குத்தியது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கோவையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கிளை 1 ல் மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூருக்கு பெரிய புத்தூர் வழியாக டவுன் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு 7.35 மணிக்கு மேட்டுப்பாளையம் போருந்து நிலையத்தில் இருந்து அன்னூருக்கு டவுன் பேருந்து புறப்பட்டது. சிறுமுகை அருகில் இருக்கும் மீனம்பாளையத்தைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவர் டிரைவர் பணியிலும் கணேசன் என்பவர் நடத்துனர் பணியிலும் இருந்தனர். 

பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வெளியே வந்த போது நடு ரோட்டில் ஒருவர் போதையில் நின்று கொண்டு டிரைவரை தகாத வார்த்தைகளால் திட்டி கீழே இறங்கி வாடா என்று மிரட்டியுள்ளார். உடனே டிரைவர் அருணாசலம் பேருந்தை விட்டு கீழே இறங்கி ஏன் நடுரோட்டில் நின்று தகராறு செய்கிறாய், பேருந்தின் குறுக்கே நிற்காதே, வழிவிட்டு ஓரமாகச் செல் என்று கூறியதாக தெரிகிறது. உடனே போதையில் இருந்தவர் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் டிரைவர் அருணாச்சலத்தின் கை மற்றும் வயிற்றுப் பகுதியில் குத்தியுள்ளார். 

இதை சற்றும் எதிர்பாராத டிரைவர் அலறி அடித்து சத்தம் போடவே அங்கிருந்தவர்கள் உடனே அவரை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் கிடைத்த காவல்துறையினர் மற்றும் அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.