எடப்பாடிக்கும் ஒபிஎஸ்சுக்கும் வக்கீல் நோட்டீஸ்.! அதிர்ச்சியில் அதிமுக தலைமை.! பின்னணியில் யார் தெரியுமா.?



advocate notice to EPS and OPS

சசிகலா சிறையில் இருந்து விடுதலையான பின்னர் தீவிரமாக அரசியலில் ஈடுபடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு யாரும் எதிர்பாராத வகையில் அவர் திடீரென்று அரசியலிலிருந்து விலகுவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதனால் சசிகலாவின் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஆனாலும், டிடிவி தினகரனின் அ.ம.மு.க தனித்து போட்டியிட்டு அதிமுக பல இடங்களில் தோற்பதற்கு காரணமாக அமைந்தது. இதனையடுத்து நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. இந்நிலையில், அதிமுக நிர்வாகிகளிடம் சசிகலா பேசும் ஆடியோக்கள் சமீப காலமாக வெளியாகி அதிமுகவில் புதிய சலசலப்பை கிளப்பி வருகிறது. 

eps

அதிமுகவை கைப்பற்ற போவதாகவும், விரைவில் தொண்டர்களை சந்திக்க இருப்பதாகவும், சசிகலா கூறிவரும் நிலையில், சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி வரும் அதிமுக தொண்டர்களை அந்த கட்சியின் தலைமை அதிரடியாக நீக்கி வருகிறது. ஆனாலும் சசிகலா தொடர்ச்சியாக அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் தொண்டர்களுடன் தொலைபேசியில் உரையாடி வருகிறார்.

இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாவின் ஆதரவாளர் எடப்பாடி சுரேஷ் என்பவர் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், அதிமுகவில் இருந்து யாரையும் நீக்க ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் இல்லை. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து விளக்கம் கேட்டு கட்சித் தலைமைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.