தமிழகம் இந்தியா

திடீரென அரசு மீட்டிங்கில் ஒளிபரப்பான அந்த மாதிரி படம்! பெண் அதிகாரிகள் என்ன செய்தார்கள் தெரியுமா?

Summary:

Adult video telecast while government video conferencing in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரில் உள்ள தலைமைச் செயலத்தில்உணவு மற்றும் சிவில் சப்ளைஸ் துறை வீடியோ கான்ஃபரன்ஸ் மீட்டிங்கின் போது திடீரென ஆபாச வீடியோ ஒளிபரப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைமைச் செயலத்தில் இருக்கும் வீடீயோ கான்ஃபரன்ஸ் அறையில் இருந்து மாநிலம் முழுவதும் உள்ள 33 மாவட்டங்களைச் சேர்ந்த துறை அதிகாரிகளிடம் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை மேற்கொண்டிருந்தார் உணவு மற்றும் சிவில் சப்ளைஸ் துறைச் செயலாளர் முக்தா சின்ஹா.

இந்நிலையில் உரையாடலின் நடுவில் வீடியோ கான்பரசிங் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வீடியோ கான்பரெஸிங்கில் இருந்த அனைவர்க்கும் திடீரென ஆபாச படம் ஒளிபரப்பட்டுள்ளது. இந்த சம்பவம் எப்படி நடந்தது, ஏன் நடந்தது என்பது குறித்து யார்க்கும் தெரியாமல் குழம்பி போய் நின்றுள்ளனர்.

வீடியோ கான்பரெஸிங்கில் கலந்துகொண்ட பெண் அதிகாரிகள் திடீரென ஆபாச படம் ஒளிபரப்பியதால் கான்பரென்ஸ் அறையில் இருந்து தலை தெறிக்க ஓட்டம் பிடித்துள்ளனர்.

பின்னர் இது குறித்து பேசிய உணவு மற்றும் சிவில் சப்ளைஸ் துறை செயலாளர் முக்தா சின்ஹா, இது குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.


Advertisement