அதிமுக பொதுச் செயலாளர் பதவி செல்லாது.! சசிகலா வழக்கை ரத்து செய்ய கோரி மனு.!

அதிமுக பொதுச் செயலாளர் பதவி செல்லாது.! சசிகலா வழக்கை ரத்து செய்ய கோரி மனு.!


admk-petitions-to-sasikala

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரனும் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என கடந்த 2017 செப்டம்பரில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வராக சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்வான நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக நியமித்துவிட்டு சசிகலா சிறைக்குச் சென்றார். சசிகலா சிறை சென்ற பிறகு ஓபிஎஸ் அணி மீண்டும் அதிமுகவில் இணைக்கப்பட்டது. இதனையடுத்து நடந்த அதிமுக பொதுக்குழுவில், அதிமுக நிர்வாகிகளாக சசிகலா தினகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

Admkஆனால், அந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என உயர்நீதிமன்றத்தில் சசிகலா, டிடிவி தினகரன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து அமமுக என்ற கட்சியை நடத்தி வருவதால் டிடிவி தினகரன் தரப்பு வழக்கில் இருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்தது. இந்நிலையில் சசிகலா தொடர்ந்த வழக்கை நிராக்கக்கோரி அதிமுக நிர்வாகிகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுவிற்கு சசிகலா பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஏப்ரல் 23 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.