
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்ச
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்திலும், கூட்டணிப் பேச்சுவார்த்தையிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தநிலையில்,பல கட்சிகளில் கூட்டணி பேச்சுவார்த்தை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்தநிலையில், முக்கிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.
இதனால் சில இடங்களில் முக்கிய கட்சிகளில் வேட்பாளர்கள் அறிவிப்பு தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராஜநாயகத்தை மாற்றக்கோரி அக்கட்சியினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அ.தி.மு.க. நிர்வாகி மூர்த்தி தலைமையில் மணமேல்குடியில் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க. தொண்டர் ஒருவர் மண்எண்ணயை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். மேலும், ஒரு அ.தி.மு.க. தொண்டர் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை மாற்றக்கோரி மொட்டை அடித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Advertisement
Advertisement