தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்.! என்னென்ன தெரியுமா.?

தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்.! என்னென்ன தெரியுமா.?



Additional restrictions in Tamil Nadu from today.

நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்று மீண்டும் இரண்டாவது அலையாக அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும், கொரோனா பரவல் தீவிரமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமெடுத்துவருவதால் மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும் கொரோனாவின் வேகம் குறையாத நிலையில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. அதாவது இன்று முதல் திரையரங்குகள் மூடப்பட வேண்டும், வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது, பெரிய கடைகள் வணிக வளாகங்கள் மால்கள் மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

corona

திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது எனவும், இறுதி சடங்குகளில் 25 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், டீக்கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆட்டோக்களில் இரண்டு பேருக்கு மட்டும் அனுமதி உண்டு என்பதும் கார்களில் மூன்று பேர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மாநகராட்சிகள், நகராட்சிகளில் அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு கட்டுப்பாடுகளை இன்று முதல் தமிழக அரசு விதித்துள்ளது.