நடிகர் விஜயும், நடிகர் சஞ்சீவும் அணிந்திருக்கும் ஒரே மாதிரியான சட்டை.! சட்டைக்கு பின்னால் இருக்கும் கதை தெரியுமா? நண்பேன்டா..!

நடிகர் விஜயும், நடிகர் சஞ்சீவும் அணிந்திருக்கும் ஒரே மாதிரியான சட்டை.! சட்டைக்கு பின்னால் இருக்கும் கதை தெரியுமா? நண்பேன்டா..!


actor vijay and sanjev wearing same shirrt

நடிகர் விஜயும், நடிகர் சஞ்சீவும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தநிலையில் தன் நண்பன் விஜய் பற்றி அவ்வவப்போது எதாவது விஜய்யுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட பழைய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவார். கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே சஞ்சீவும் விஜய்யும் நெருங்கிய நண்பர்கள். 

கல்லூரி கால நண்பர்களான இவர்களின் நட்பு 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. விஜய்யின் சந்திரலேகா, நிலாவே வா, புதிய கீதை, பத்ரி உள்ளிட்டப் படங்களில் சஞ்சீவ் நடித்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம்தான் சஞ்சீவ் சின்னத்திரையில் அறிமுகமானார். பின்னர் திருமதி செல்வம் தொடரில் ஹீரோவாக நடித்து பிரபலமானார். பின்னர் மாநாட மயிலாட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தற்போது பிரபல தொலைக்காட்சியில் கண்மணி எனும் சீரியலில் நடித்து வருகிறார்.


 மாஸ்டர் படத்திலும் விஜய் நண்பராக நடித்துள்ளார். இந்தநிலையில் நடிகர் விஜய்யும், தானும் ஒரே மாதிரியான சட்டை அணிந்திருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.  அந்த பதிவில், “இந்த சட்டை தொடர்பாக நிறையப் பதிவுகளைப்  பார்த்தேன். ஆமாம், இது ஒரே மாதிரியான சட்டைதான். வேலாயுதம் படத்தில் நடித்தபோது நண்பன் விஜய் எனக்கு கொடுத்தது. 8 ஆண்டுகள் கழித்தும் இந்தச் சட்டை எனக்கு ஃபிட்டாக உள்ளது. நண்பேண்டா” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு நட்பை போற்றியுள்ளார்.