எல்லா பக்கமும் துயரம்!. துடி துடிக்கும் அபிராமியின் கணவர்!.
எல்லா பக்கமும் துயரம்!. துடி துடிக்கும் அபிராமியின் கணவர்!.

குன்றத்தூரை சேர்ந்த விஜய் என்பவர் தனது மனைவி அபிராமி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவரை வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். விஜய் குழந்தைகள் மீதும் மனைவியின் மீதும் அளவற்ற பாசம் கொண்டவர்.
இந்த நிலையில் விஜயின் மனைவி அபிராமிக்கும் அப்பகுதியில் உள்ள பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரம் என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. தன் கணவனையும், குழந்தைகளையும் மறந்து உல்லாசத்திற்காக கள்ள காதலனுடன் செல்வதற்கு திட்டமிட்டுள்ளார்.
இதனால் தான் பெற்ற குழந்தை என்று கூட பாராமல் அழகான இரண்டு குழந்தைகளை உணவில் விஷம் வைத்து கொலை செய்துள்ளார். இளம் பிஞ்சு குழந்தைகளை கொலை செய்த சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து கைது செய்யப்பட்ட அபிராமி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் தான் பெற்ற அழகான இரண்டு குழந்தைகளை இழந்தும், காதலித்து திருமணம் செய்த மனைவி கள்ள காதலனுக்காக குழந்தைகளை கொலை செய்ததாலும் துக்கத்தில் பித்து பிடித்தது போல் இருந்து வருகிறார் விஜய்.
ஆரம்பத்தில் விஜய் -அபிராமி ஆகியோரின் காதலை ஏற்காத விஜயின் பெற்றோர் தற்போது அவரை கைவிட்டு விட்டுள்ளனர்.
இந்நிலையில் தனி ஆளாக தவிக்கும் விஜயை ஆறுதலாக அபிராமியின் பெற்றோர் தங்களுடனே தங்க வைத்து கொண்டுள்ளனர். அன்புக்காக ஏங்கும் விஜய் அவரின் மாமனார் வீட்டில் தங்கியுள்ளார்.