விசிக கூட்டத்திற்கு சென்ற சிறுவனை அடித்து நொறுக்கிய தாய்; 10 மாதம் தான் சுமந்து பெற்றதாக வேதனை.. வைரல் வீடியோ உள்ளே.!

விசிக கூட்டத்திற்கு சென்ற சிறுவனை அடித்து நொறுக்கிய தாய்; 10 மாதம் தான் சுமந்து பெற்றதாக வேதனை.. வைரல் வீடியோ உள்ளே.!


a Women Condemn Son When he Attend VCK Party Meeting With Father 

 

சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சிறுவனின் வீரவணக்க வீடியோ ஒன்று, அக்கட்சியினர் மத்தியில் வைரலாகியது. இந்த விடியோவை பார்த்த சிறுவனின் தாய், தனது மகனின் செயல்பாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். 

அந்த பெண்ணின் வீடியோவில், "சிவகங்கை மேற்கு ஒன்றிய செயலாளர் தவசியின் இரண்டாவது மகன் தமிழ்செல்வன். இவர் தனது அம்மாவுக்கு தெரியாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோடியை திருவிழாவன்று தந்தையுடன் சென்று ஏற்றியிருக்கிறார். அவர் ஆவேசமாக பேசிய வீடியோ தந்தையால் பகிரப்பட்டுள்ளது. அதற்கு ஒரு தாயாக நான் கண்டிக்கிறேன். இந்த விடீயோவையும் நீங்கள் பாருங்கள்.

tamilnadu

மகனை கண்டிக்கும் தாயோ, "வீரவணக்கம் வீரவணக்கம் என்னை 10 மாதம் சுமந்து பெற்ற தாய்க்கு வீரவணக்கம். காட்சிப்பற்று எனக்கு வேண்டாம், நாற்றுப்பற்று இருந்தால் போதும்" என கூறச்சொன்னார். உனக்கு என்ன வயது ஆகிறது?. நீ போவியா?. பல் துலக்க தெரியுதா?. ஜட்டி துவைக்க தெரியுதா?. டம்ப்ளர் கழுவ தெரியுதா?. அப்பன் புத்தி வருகிறதா?. என்ன வீரவணக்கம் போடுகிறாய்?.

அ, ஆ, உயிரெழுத்து, மெய்யெழுத்து தெரியுமா?. இனி கூட்டத்திற்கு போவியா?. கட்சிக்கொடி கட்டியா?. யாரோ திருமாவளவனுக்கு வீரவணக்கம் போடுகிறாய் அல்லவா?. உன்னை 10 மாதம் வயிற்றில் வைத்து, அதனை அறுத்து உன்னை பெற்றேன் அல்லவா?. 

எனக்கு காலை வணக்கம் சொல்லியிருக்கிறாயா?" என வீடியோ வைரலாகி வருகிறது. தனது மகனின் கட்சி-ஜாதி ரீதியிலான செயல்பாடுகளை அவர் கடுமையாக கண்டித்து, நாட்டுப்பற்றே சிறந்தது என்ற உணர்வை வெளிப்படுத்தும் பொருட்டு கூறி இருக்கிறார்.

வீடியோவின் அடிப்படையில் செய்தி பதிவிடப்பட்டுள்ளது..