சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
தங்கையே அக்காவை தீர்த்துக்கட்டிய கொடூரம்... முக்கிய குற்றவாளி அதிர்ச்சி வாக்குமூலம்.!
சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் கடந்த ஜூலை 21ஆம் தேதி ராஜேஸ்வரி என்ற பெண் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கும் அவரது தங்கை அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் ராஜேஸ்வரின் தங்கை நாகவள்ளியின் மீது சந்தேகம் கொண்டுஅவரை கைது செய்து விசாரணை நடத்தினார். காவல்துறையிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலம் பல திடுக்கிடும் உண்மைகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ள நாகவள்ளி "தனது அக்கா ராஜேஸ்வரிக்கு வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும் அதனை தான் கண்டித்து வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து கள்ளத்தொடர்பிலிருந்து வந்ததால் இரண்டு நாட்களுக்கு முன்பு கூலிப்படையை வைத்து தனது அக்காவை கொலை செய்ததாக காவல்துறையிடம் தெரிவித்திருக்கிறார் நாகவள்ளி. இதனைத் தொடர்ந்து இவரை கைது செய்த காவல்துறையினர் இவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.