வேலியே பயிரை மேயலாமா.? 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த காவல்துறை அதிகாரி.!

வேலியே பயிரை மேயலாமா.? 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த காவல்துறை அதிகாரி.!


A police officer who raped a 17-year-old girl

தருமபுரி அருகே பென்னாகரத்தில் புகார் வழங்குவதற்காக காவல் நிலையத்திற்கு வந்த 2 குழந்தைகளுக்கு தாயான 17 வயது சிறுமியை காவல்துறை அதிகாரியே மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Rape

2 குழந்தைக்கு தாயான அந்த 17 வயது சிறுமிக்கும், அவரது மாமியாருக்குமிடையில் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆகவே, இந்த விவகாரம் தொடர்பாக புகார் வழங்குவதற்காக காவல் நிலையத்திற்கு வந்த அந்த சிறுமியை ஏரியூர் சப் இன்ஸ்பெக்டர் சகாதேவன் மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

Rape

இந்த சம்பவம்  தொடர்பாக சகாதேவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். இந்த சம்பவம் தர்மபுரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.