"இப்படி எல்லாம் ஆட்டைய போடுவாங்களா..." விவசாயிடம் நூதன முறையில் கைவரிசை காட்டிய நபர்.!

"இப்படி எல்லாம் ஆட்டைய போடுவாங்களா..." விவசாயிடம் நூதன முறையில் கைவரிசை காட்டிய நபர்.!



a-man-stole-40-thousand-rupees-from-a-farmer-in-a-moder

ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிடமிருந்து நூதன முறையில் 40 ஆயிரம் ரூபாய் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அவர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் பணம் திருடிய நபரை தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மூலக்கொத்தளம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(62). விவசாயியான இவர் பணம் எடுப்பதற்காக அங்குள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் பணம் எடுக்கும் இயந்திரத்திற்கு சென்று இருக்கிறார். அப்போது அங்கிருந்த ஒரு நபர் இவருக்கு பணம் எடுக்க உதவுவது போல் இவரது ஏடிஎம் கார்டை வாங்கி இருக்கிறார்.

tamilnaduபின்னர் அந்தக் கார்டை மெஷினில் செலுத்தி சுப்பிரமணியத்திடம் பாஸ்வேர்டை டைப் பண்ண சொல்லி இருக்கிறார். அவர் பாஸ்வேர்ட் டைப் செய்ததும் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று கூறி போலி கார்டை அவரிடம் திரும்ப கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து சுப்பிரமணியமும் அங்கிருந்து சென்று விட்டார்.

tamilnaduஅதன்பிறகு சுப்பிரமணியத்தின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி இரண்டு முறை பத்தாயிரம் ரூபாய் பணம் எடுத்திருக்கிறார். மேலும் ஜவுளி கடையில் சென்று 20000 ரூபாய்க்கு துணிகள் வாங்கி உள்ளார். இது தொடர்பான தகவல்கள் சுப்ரமணியத்தின் செல்போன் எண்ணிற்கு சென்றதால் அதிர்ச்சி அடைந்த அவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பணம் திருடிய நபரை தேடி வருகின்றனர்.

.