"நான் ஓசிக்கு வரமாட்டேன். எனக்கு டிக்கெட் கொடு" மகளிர் பேருந்தில் அடம்பிடிக்கும் மூதாட்டி.. வைரல் வீடியோ..!

"நான் ஓசிக்கு வரமாட்டேன். எனக்கு டிக்கெட் கொடு" மகளிர் பேருந்தில் அடம்பிடிக்கும் மூதாட்டி.. வைரல் வீடியோ..!


A Lady Argue with Govt Bus Conductor about Free Pass Ladies

அமைச்சரின் பேச்சால் கொதித்தெழுந்த மூதாட்டி அரசின் இலவச பேருந்து திட்டம் எனக்கு வேண்டாம், நான் பணம் கொடுத்தே பயணம் செய்வேன் என நடத்துனரிடம் வம்பு செய்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

திமுக அமைச்சர் பொன்முடி சமீபத்தில் கலந்துகொண்ட கட்சி பொதுக்கூட்டத்தில் பேசுகையில், பெண்களுக்கு ஓசியில் பேருந்து பயணம் செய்ய அரசு ஏற்பாடு செய்திருக்கிறது என அரசின் திட்டத்தை மேற்கோள்கண்பித்து விமர்சிக்கும் வகையிலேயே அவர் பேசியிருந்தார். 

இதுகுறித்த பேச்சுக்கு அமைச்சருக்கு எதிராக பல்வேறு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. மேலும், திமுக தலைவரான முதலவர் மு.க ஸ்டாலின் அங்கீகரித்து வழங்கியுள்ள திட்டத்தை எப்படி அமைச்சர் தரம்தாழ்த்தி விமர்சனம் செய்கிறார் என்றும் கூறப்பட்டது. 

இந்த நிலையில், கோவையை சேர்ந்த மூதாட்டி அரசு பேருந்தில் பயணம் செய்கையில், என்னால் ஓசிக்கு பயணம் செய்ய முடியாது. நான் டிக்கெட் வாங்கிக்கொண்டு தான் பயணம் செய்வேன் என நடத்தினரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. 

இதுகுறித்த வீடியோ காட்சிகள் எதிர்கட்சிகளால் பகிரப்பட்டு வைரலாக்கப்பட்டு வருகிறது. இலவச பயணம் என்பது இன்றளவும் இயலாத மக்களால் உபயோகம் செய்யப்படுகிறது. அதனை அமைச்சர் வரைமுறையின்றி பேசியதும், மூதாட்டியின் செயலும் அதிர்ச்சியையை ஏற்படுத்துகிறது.