"அந்த மனசு தான் கடவுள்" மாற்றுத்திறனாளி சிறுவனை தோளில் சுமந்து செல்லும் சிறுவன்.. வைரலாகும் வீடியோ.!

"அந்த மனசு தான் கடவுள்" மாற்றுத்திறனாளி சிறுவனை தோளில் சுமந்து செல்லும் சிறுவன்.. வைரலாகும் வீடியோ.!


a-child-helps-physically-challenged-another-child-cute

மழலை பருவம் என்பது ஜாதி, மத, வெறுப்பு, கோபத்திற்கு அப்பாற்பட்டது. அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் நம்மை வியந்து பார்க்கவைக்கும். சில மழலைகள் செய்யும் சேட்டையும், செல்ல குறும்புகளும் அதனை ரசிக்க வைத்து நமது மனதை கரைத்துவிடும். 

தன்னால் இயன்ற உதவியை முடியாதோருக்கு செய்யும் பெருமைமிக்க குணம் மழைப்பருவங்களில் சற்று அதிகரித்தே இருக்கும். சிறுவர்கள் 4 பேர் எங்கேயோ செல்ல முடிவெடுத்த நிலையில், கால்களை ஊன்றி நடக்க இயலாத சிறுவனும் அவர்களுடன் செல்ல தயாராகிறான். 

சிறுவன் தவழ்ந்தவாறு சாலைக்கு வந்த நிலையில், மேற்படி செல்ல இயலாமல் மழை நீர் தேங்கி இருக்கிறது. முன்னால் சென்று கொண்டு இருந்த 3 சிறுவர்களில் ஒருவர் வந்து, சிறுவனை தனது முதுகில் தூக்கிக்கொண்டு செல்லும் நெகிழ்ச்சி காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.