பைக் மீது மோதிய கார்.. சினிமா பாணியில் தூக்கி வீசப்பட்ட தாய் மற்றும் மகன்... பலியான பரபரப்பு சம்பவம்..!

பைக் மீது மோதிய கார்.. சினிமா பாணியில் தூக்கி வீசப்பட்ட தாய் மற்றும் மகன்... பலியான பரபரப்பு சம்பவம்..!A car hit a bike.. mother and son were thrown in cinematic style... a sensational incident where the victim died..!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஜேடர்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் விஜியா மற்றும் அவரது மகன் ரவிக்குமார்.இந்நிலையில் நேற்று மாலை 7 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் ரவிக்குமார் தனது தாய் விஜியாவை ஏற்றிக்கொண்டு ராசிபுரம் நோக்கி சென்றுள்ளார்.

அப்போது ராசிபுரம் அடுத்த எல்ஐசி மேம்பாலத்தில் சென்றபோது எதிரே வந்த கார் ஒன்று இவர்கள் சென்ற பைக்கின் மீது அதிவேகமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ரவிக்குமார் மற்றும் விஜியா தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.

Road accident

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே விஜியா உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் ரவிக்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.