தமிழகம்

வீட்டிலேயே இருந்து பழகியதால் பள்ளிக்கு போக விருப்பமில்லை.! கண்டித்த பெற்றோர்.! 9-ம் வகுப்பு மாணவர் எடுத்த விபரீத முடிவு.!

Summary:

சென்னை செங்குன்றத்தை அடுத்த லட்சுமிபுரம் பாலசண்முகம் நகர்பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருட

சென்னை செங்குன்றத்தை அடுத்த லட்சுமிபுரம் பாலசண்முகம் நகர்பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சிவசக்தி. 14 வயது நிரம்பிய சிறுவன் சிவசக்தி அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே மூடப்பட்டது. தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்ததை தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள் கடந்த 1-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டது. 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக வீட்டிலேயே இருந்த சிவசக்தி, மீண்டும் பள்ளி திறந்தபிறகு சரியாக பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் விரக்தி அடைந்த சிவசக்தி நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement