
9 standard student leave from home
ஈரோடு மாவட்டம் பெருந்துறை காஞ்சிகோவிலில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. அந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த மவுலி, தருண்ஸ்ரீ, விஜய், மிதுன் ரித்தீஷ் ஆகிய நான்கு மாணவர்களும் 9ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற மாணவர்கள் நான்கு பேரும் மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் பதறிப்போன அவர்களது பெற்றோர்கள் காஞ்சிகோவில் காவல் நிலையத்தில் தங்களது மகன்களை காணவில்லை என புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்றுகொண்ட காவல் துறையினர் உடனே மாணவர்களை தேடி வருகின்றனர்.
மேலும் இந்நிலையில் மாணவர்கள் 4 பேர் காணாமல் போனது குறித்து போலீசார் பள்ளியில் உள்ள சக மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவர்கள் அந்த நான்கு மாணவர்களும் படிப்பதற்கு செலவு அதிகமாக இருப்பதால், பெற்றோர்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை என அடிக்கடிகூறி வந்ததாக கூறியுள்ளனர்.
இதற்கிடையில் அந்த 4 மாணவர்களும் விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement