விஜய் சேதுபதியின் தக் லைப் மொமண்ட்ஸ்; விஜய் டிவி வெளியிட்ட வீடியோ உள்ளே.!
72 வயதிலும் அடங்காத ஆசை! 8 வயது சிறுமியை மருத்துவரிடம் அழைத்துச்சென்ற தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி
8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 72 வயது முதியவரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்துவரும்நிலையில் தற்போது மேலும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே மேட்டுப்பாளையம் அருகே கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்.
72 வயதாகும் செல்வராஜ் ஒய்வு பெற்ற கூட்டுறவு சங்க அதிகாரி ஆவர். இவர் அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் கொடுமை செய்துள்ளார். குறிப்பிட்ட சிறுமி கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டநிலையில் அவரது தாயார் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளார்.
அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பாலியல் கொடுமைக்கு ஆளாகியிருப்பதை கண்டறிந்தனர். பின்னர் இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்ததில் அவர் 72 வயதுக்கும் செல்வராஜ்தான் இதற்கு காரணம் என கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் போலீசார் செல்வராஜை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.