தனக்கான கல்லறையை இறப்பதுற்கு முன்பே கட்டிவைத்துள்ள நடிகர் ராஜேஷ்! காரணம் என்ன தெரியுமா?
என் அப்பா என்னை ஏமாற்றிவிட்டார்.! தந்தை மீது அதிரடியாக புகார் அளித்த 7 வயது சிறுமிக்கு அடித்த மாபெரும் அதிர்ஷ்டம் .!

வேலுார் மாவட்டம், ஆம்பூரில் காசித்து வருபவர் இஷானுல்லா, இவர் கூலித்தொழில் செய்து வருகிறார்.இவரது மகள் ஹனீபாஜாரா, 7 வயது நிறைந்த இவர் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரது வீட்டில், கழிவறை இல்லாத காரணத்தால் திறந்தவெளியை பயன்படுத்தி வந்தநிலையில் கழிவறை கட்டித் தருமாறு, ஹனீபாஜாரா நீண்ட நாட்களாக அவரது தந்தையிடம் கேட்டு வந்துள்ளார்.
அதற்கு,இஷானுல்ல நன்கு படித்து, பள்ளியின் முதல் மாணவியாக வந்தால், கழிவறை கட்டித் தருவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் ஹனீபாஜாரா பள்ளியின் முதல் மாணவியாக வந்து, கழிவறை கட்டித்தர கூறியுள்ளார்.ஆனால் இஷானுல்லா கட்டிதருவதாக கூறி நாட்களை இழுத்தடித்துள்ளார்.
இதனால் ஏமாற்றமடைந்த ஹனீபாஜாரா கழிவறை கட்டித்தராமல், தன்னை ஏமாற்றிய தந்தை மீது மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் கொடுத்த வாக்கை நிறைவேற்றாததால் தனது தந்தையை உடனே கைது செய்யவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார் .
பின்னர் சிறுமியின் செயலை கண்டு ஆச்சரியமடைந்த கலெக்டர் ராமன் அவரை பாராட்டிய , சிறுமியின் வீட்டில், உடனடியாக கழிவறை கட்டித் தர நடவடிக்கை எடுக்குமாறு, ஆம்பூர் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதிக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் சிறுமியை கவுரவிக்கும்வகையில் ஆம்பூர் நகராட்சியின், 'துாய்மை இந்தியா' திட்டத்தின் தூதுவராக சிறுமியை நியமித்து, நகராட்சி ஆணையர் நேற்று உத்தரவிட்டார்.
மேலும் தைரியமாக முன் வந்து தன் தந்தை மீது புகார் அளித்த 7 வயது சிறுமிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.