ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு.... இன்று 7 டாஸ்மாக் கடைகள் மூடல்..!!
ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு.... இன்று 7 டாஸ்மாக் கடைகள் மூடல்..!!

100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வாக்கு என்னும் பணியில் ஈடுபட உள்ளனர்.
கடந்த 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் வியாழக்கிழமையான இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில், இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று அந்த கல்லூரியின் சுற்றுவட்டார பகுதிகளான எலவுமலை, சுண்ணாம்பு ஓடை, சித்தோடு ஆகிய பகுதிகளில் உள்ள 7 டாஸ்மாக் கடைகள் இன்று மூடப்பட்டுள்ளன.
மேலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைத்துள்ள அறை, வாக்கு எண்ணிக்கை அறைகளை சுற்றி ஈரோடு காவல்துறையினர், துணை ராணுவப்படை வீரர்கள், தமிழ்நாடு சிறப்புப்படை துப்பாக்கி ஏந்திய வீரர்கள், ஆயுதப்படை என்று மொத்தம் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.