திடீரென மயங்கி விழுந்த 7ஆம் வகுப்பு மாணவி! மருத்துவமனைக்கு தூக்கி சென்ற பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!7-standard-student-dead-drinking-poision

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அறிவொளி நகரில் வசித்து வந்தவர் பிரபு. இவரது மகள் பூவிகா. 13 வயது நிறைந்த இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவிவரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனால் அந்த சிறுமி வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று திடீரென பூவிகா மயங்கி விழுந்துள்ளார். அதனை கண்டு பதறிப்போன அவரது பெற்றோர்கள் கதறிக்கொண்டே மூச்சுப்பேச்சின்றி கிடந்த மகளை மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர்.

mettupalaiyam

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி  சாணிப்பவுடரை குடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் அங்கு தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  வழக்குப் பதிவு சிறுமி தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.