தமிழகம்

7 திருமணம் செய்தும் அடங்காத ஆசை! 65 வயது தொழிலதிபர் செய்த காரியத்தால் கதறும் இளம்பெண்ணின் பெற்றோர்கள்!

Summary:

65 year oldman like to marry 23 year young girl

சென்னை வடபழனியில் வசித்து வந்தவர் பஷீர். இவருடைய மனைவி பாத்திமா. இவர்களது 23 வயதில் மகள் உள்ளார். அவர் நெல்லையில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் பஷீர் மற்றும் பாத்திமா இருவரும் நெல்லை மாநகர காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில்  எங்களுடைய மகள் நெல்லையில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி, வேலைக்கு சென்று வந்தார். 

அப்போது கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவர் எனது மகளை திருமணம் செய்து கொள்கிறேன். ஓட்டல் சூப்பர் மார்க்கெட்டுகளை தருகிறேன் என  ஆசைவார்த்தை கூறி தனி வீட்டில் தங்க வைத்துள்ளார். அவருக்கு 65 வயதுக்கு மேலாகிறது. அவர் ஏற்கனவே 7 பெண்களை திருமணம் செய்துள்ளார் தற்போது எனது 23 வயது மகளை 8-வதாக திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்கிறார். இதை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.

மேலும் அவரிடமிருந்து எங்களது மகளை மீட்க சென்றபோது கொலை மிரட்டல் விடுத்து விரட்டி அடித்தனர். எங்களது  மகளை உடனடியாக மீட்டுத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.இதையடுத்து போலீசார் அந்த இளம்பெண்ணை அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement