#Breaking: வங்கிக்கணக்கில் ரூ.5000 வந்துவிட்டதா? மிகப்பெரிய பிரச்சனை - அமைச்சர் ரகுபதி பேச்சு.!
மகளிர் உரிமைத்தொகையை முடக்க அதிமுக, பாஜக சதிசெய்து வருகிறது என அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்தார்.
திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, இன்று (பிப்.13) பிப்ரவரி, ஏப்ரல், மே மாதத்துக்கான மகளிர் உரிமைத்தொகை ரூ.3000 மற்றும் கோடைகால சிறப்புத்தொகை ரூ.2000 என ரேஷன் அட்டைதாரர்களின் வங்கிக்கணக்கில் ரூ.5000ஐ வரவு வைத்தது. இந்த விசயத்துக்கு ஆளும் தரப்பு ஆதரவாக பேசினாலும், அதிமுக, தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் அறிவிப்புக்கு முன் இந்த தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது மக்களின் வாக்கை திசைதிருப்பும் முயற்சி என விமர்சித்து வருகிறது.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இதுதொடர்பாக விளக்கம் அளிக்க செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, "எடப்பாடி பழனிச்சாமி எப்போதும் சொல்வார், செய்யமாட்டார். கடந்த காலங்களில் அதற்கு எடுத்துக்காட்டாக பல நிகழ்வுகள் இருக்கின்றன. தமிழ்நாடு அரசு அறிவித்துவிட்டு ரூ.5000 தந்தால், நாங்கள் தந்தோம் என்று நீதிமன்றத்துக்கு சென்று தடை வாங்குவார்கள். தடை உத்தரவு வாங்குவதற்கு முன்னரே, மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.5000 வழங்கி இருக்கிறோம். சூரியனை எந்த கையும் மறைக்க முடியாது. எந்த மேகம் மறைத்தாலும் கிழித்துக்கொண்டு சூரியன் வரும்.
இதையும் படிங்க: தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு என்னென்ன? ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 2000....? ரெடியா இருங்க....!

அரசின் திட்டத்தை இழிவுபடுத்தினார்கள்:
பாஜகவும், அதிமுகவும் எத்தனை தூற்றுகள் விதைத்தாலும், திமுகவை தடுத்து நிறுத்த முடியாது. சொல், செயல் என்பதே ஸ்டாலினின் அதிரடி ஆட்சி. பெண்களுக்கு கிடைக்கும் நன்மையை யாராலும் தடுக்க முடியாது. இலவச திட்டங்களை வழங்குவது நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்து என வசைபாடியவர் பிரதமர் நரேந்திர மோடி. விடியல் பயணத்திட்டம், ரூ.1000 உரிமைத்தொகையை விமர்சனம் செய்தவர் பிரதமர். ஆனால், நமது முதல்வர் பெண்களை வாழவைக்க பல திட்டங்களை அறிமுகம் செய்து இருக்கிறார்.
பொய்பாடி பழனிச்சாமி:
மக்கள் மீது பேரன்பும், பாசமும் கொண்ட தலைவராக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார். அதற்கு அவர் அறிவித்துள்ள திட்டங்களே சாட்சி ஆகும். மகளிர் உரிமைத்தொகையை முடக்கி வைக்க பாஜக, அதிமுக சதிசெய்து வருகிறது. அரசின் திட்டங்களை முடக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. அதனாலேயே பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் என 3 மாதங்களுக்கு ரூ.3000 மற்றும் கோடைகால சிறப்புத்தொகையாக ரூ.2000 என மொத்தமாக ரூ.5000 வரவு வைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித்தலைவர் பொய்பாடி பழனிச்சாமி சொல்வார், ஒருபோதும் செய்யபோவதில்லை" என பேசினார்.
இதையும் படிங்க: தோல்வி பயத்தில் அஞ்சி ஆயிரம்.. கோடைக்கால சிறப்புத் தொகை - எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்.!