தமிழகத்தில் ஒரே மாவட்டத்தில், ஒரே நாளில் 32 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.!

தமிழகத்தில் ஒரே மாவட்டத்தில், ஒரே நாளில் 32 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.!


32 people discharged from corona in trichy

உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனாவால் நாடுமுழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக நாடுகளில் இந்த கொடூர வைரஸ் அதிகமாக பரவி வந்த நிலையில், பாரத பிரதமர் மோடி சரியான நேரத்தில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல் படுத்தினார். இதனையடுத்து கொரோனா பரவல் சற்று தடுக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவுவதை முழுவதுமாக தடுக்க நாடு முழுவதும் மே 3-ஆம் தேதி வரை பிரதமர் ஊரடங்கு உத்தரவை மேலும் நீடித்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்தவர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 32 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் குணமடைந்துள்ளனர். 

corona

இந்தநிலையில், கொரோனாவிலிருந்து மீண்டவர்களை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வழியனுப்பும் நிகழ்வு நடைபெற்றது.  இதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திருச்சி மருத்துவமனையில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த 32 பேரும்  ஆம்புலன்ஸ்கள் மூலம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  கொரோனா தொற்றில் இருந்து மீண்ட 32 பேருக்கும் பழங்கள் உள்ளிட்ட சத்தான உணவு பொருட்கள் வழங்கி, உரிய அறிவுரைகளும் கூறப்பட்டது.  தொடர்ந்து மருத்துவ பணியாளர்கள் கைதட்டி, 32 பேரையும் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். கொரோனாவில் இருந்து மீண்ட 32 பேரையும் வீட்டிலேயே தனிமையில் இருக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.