தமிழகம்

தாங்கள் அணிந்திருந்த புடவையை வீசி இளைஞர்கள் உயிரை காப்பாற்றிய 3 பெண்கள்!

Summary:

3 womens saved youngsters from river

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்த ரஞ்சித், பவித்திரன், செந்தில்வேலன், கார்த்திக் ஆகிய இளைஞர்கள் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.அப்போது ஆற்றுப் பள்ளத்தில் ரஞ்சித் மற்றும் பவித்திரன் ஆகியோர் விழுந்து சிக்கி கொண்டு உயிருக்கு போராடினார்கள்.

அவர்கள் தண்ணீரில் தத்தளிப்பதை பார்த்த கார்த்திக் மற்றும் செந்தில்வேலன் அவர்களைக் காப்பாற்ற ஆற்றில் குதித்துள்ளனர். அவர்களும் அதே பள்ளத்தில் சிக்கிக் கொண்டு போராடினர். அப்போது, அங்கு துணி துவைத்துக் கொண்டிருந்த முத்தம்மாள், செந்தமிழ்ச்செல்வி, ஆனந்தவல்லி ஆகியோர் இளைஞர்களின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து அவர்கள் மூவரும் ஆற்றில் இறங்கி தாங்கள் உடுத்தியிருந்த புடவையை அவர்களது உயிரைக் காப்பாற்றத் தூக்கி வீசி ஒருவரையொருவர் பிடித்துக்கொண்டு அந்த இளைஞர்களைக் காப்பாற்றப் போராடினர். ஆனால் இரண்டு இளைஞர்களை உயிருடன் மீட்டனர். பவித்ரன், ரஞ்சித் ஆகிய இருவர் உயிரிழந்தனர். இது குறித்து அந்த பெண்கள் கூறுகையில், இருவரை காப்பாற்ற முடியாமல் போனது மிகவும் வருத்தமாக உள்ளதோடு, எங்கள் கண் எதிரில் அவர்கள் இறந்தது வேதனை தருகிறது என கூறியுள்ளனர்.


Advertisement