தமிழகம்

கையில் ஆயுதங்களுடன் அரைநிர்வாணமாக சுற்றித்திரியும் மர்ம நபர்கள்.? வைரலாகும் சிசிடிவி காட்சிகள்.!

Summary:

3 unknown persons roaming in Covai at midnight viral video

கோவையில் அதிகாலை நேரத்தில் மர்மநபர்கள் கையில் ஆயுதங்களுடன், மேல் சட்டை அணியாமல் அரைநிர்வாணமாக சாலையில் சுற்றித்திரியும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள இருகூர் தீபம் நகர் பகுதியில் கடந்த 23 ஆம் தேதி, அதிகாலை 3.30 மணியளவில் மர்மநபர்கள் மூன்று பேர் கையில் ஆயுதங்களுடன், சட்டை ஏதும் அணியாமல், முகத்தை மறைத்துக்கொண்டு அரைநிர்வாணமாக அங்குல சாலை வழியே நடந்துசெல்லும் காட்சிகள் வெளியாகி அந்த பகுதி மக்களை கடும் பீதியில் ஆழ்த்தியது.

சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக கொண்டு அந்த பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் இருகூர் தீபம் நகர் பகுதியில் சுற்றித்திரிந்த அந்த மர்மக்கும்பல் அன்றைய தினமே பீளமேடு குருகார்டன்  பகுதியில் சுற்றி இருப்பதும் தற்போது அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமிரா காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.

இவர்கள் யார், கையில் ஆயுதங்களுடன் இவ்வளவு தைரியமாக சாலைகளில் சுற்றிவர என்ன காரணம் என போலீசார் விசாரித்துவருகின்றனர்.


Advertisement