தமிழகம்

தந்தையின் ஒரு நொடி செயலால், ஆட்டோவில் சென்ற 3 மாத குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்.!

Summary:

3 month child dead in auto by a second act of father

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் வசித்து வந்தவர் வேலன். 40 வயது நிறைந்த இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார்.
இவரது மனைவி அர்ச்சனா. இவர்களுக்கு யோகேஷ் ராஜ் என்ற குழந்தை உள்ளது.

இந்நிலையில் வேலன் மற்றும் அவருடைய மனைவி சமீபத்தில் இரவு 11 மணி அளவில் தனது 3 மாத கைக்குழந்தையுடன் அயனாவரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது சாலையில் குடிபோதையில் தள்ளாடி வந்தவரை இடிக்காமல் இருக்க திடீரென பிரேக் பிடித்து திருப்பியுள்ளார்.

அப்போது வந்த வேகத்தில் பிரேக் பிடித்தால், அவரது மனைவி மற்றும் 3 மாத குழந்தை நிலை தடுமாறி ஆட்டோவில் இருந்து கீழே விழுந்தனர்.
இதில் வேலனின் மனைவி அர்ச்சனா விற்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் குழந்தை யோகேஸ்வரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து பதறிப்போன வேலன் தனது குழந்தையை உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு யோகேஷ் ராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

இச்சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


Advertisement