தமிழகம்

17 வயது சிறுமியுடன் நடந்த திருமணம்! டிக்டாக் வீடியோவால் சிக்கிய புதுமாப்பிள்ளை!

Summary:

27 age man married 15 years child in manaparai

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வையம்பட்டி கிராமத்தில் வசித்து வந்த 12ம் வகுப்பு படித்துவந்த 17 வயது சிறுமிக்கு, பேருநாயக்கன்பட்டியில்  வசித்துவந்த பழனிசாமி என்ற 22 வயது வாலிபருடன் கடந்த மாதம் 27ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் அவர்களது திருமண  புகைப்படங்களை அப்பகுதியில் உள்ள இளைஞர் ஒருவர் டிக்டாக்கில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இதுகுறித்து அறிந்த 
திருச்சி மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் சிறுமிக்கு நடந்த  திருமணம் குறித்து அப்பகுதியில்  விசாரணை மேற்கொண்டுள்ளனர். பின்னர் இந்த திருமணம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து போலீசார் திருமணம் நடைபெற்ற சிறுமியின் பெற்றோர்கள், கணவர் பழனிச்சாமி ஆகியோரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


Advertisement