17 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்த 26 வயது இளம் பெண்! விசாரணையில் பெற்றோர்க்கு காத்திருந்த அதிர்ச்சி!26 years old girl ran with 17 years old boy

மதுரையை சேர்ந்த நவீன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 17 வயது சிறுவன் ஒருவன் தனது தாத்தா வீட்டில் தங்கி படித்துவந்த நிலையில், தாத்தா வீட்டின் அருகில் வசித்துவந்த ஷீலா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 26 வயது பெண்ணுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளான்.

இருவருக்கும் பெரிய அளவு வயது வித்தியாசம் என்பதால் இவர்கள் இருவரும் பழகிவந்ததை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. காதல் கிரகத்தில் இருவருக்கும் வயது வித்தியாசம் ஒரு விஷயமாக தெரியவில்லை.

Love

இந்நிலையில் திடீரென இருவரும் மாயமாகிவிட்டனர். இதுகுறித்து விசாரித்தபிறகுதான் சிறுவனும், இளம் பெண்ணும் காதலித்து தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் குடும்பத்தினர் கரிமேடு போலீசில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக இருக்கும் சிறுவனையும், இளம் பெண்ணையும் தேடி வருகின்றனர்.

காதல் மயக்கத்தில் 17 வயது சிறுவனை 26 வயது இளம் பெண் அழைத்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.