மகளின் தோழியுடன் தகாத உறவு! எல்லை மீறிய சமயத்தில் கழுத்தை அறுத்து கொன்ற இளம் பெண்!



22 years old girl killed 51 years old man in chennai

சென்னை துறைமுகம் அருகே உள்ள விளையாட்டு மைதானம் அருகே இரத்த வெள்ளத்தில் ஆண் சடலம் ஓன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிணமாக கிடப்பது திருவொற்றியூர் சாத்தாங்காடு மேட்டு தெருவைச் சேர்ந்த சேகர் என்பதை கண்டறிந்தனர்.

கொலை சம்மந்தமான விசாரணையில் தனது மகளின் தோழியான 22 வயது பெண்ணுக்கும், சேகருக்கும் இடையே 5 ஆண்டுகளுக்கு முன் பழக்கம் இருந்ததும், தற்போது அந்த பெண்தான் சேகரை கொலை செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Crime

இதுகுறித்து அந்த பெண் கூறிய வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் காதல் ஏற்பட்டு, இருவீட்டாரும் திருமணம் பேசி முடிந்ததாகவும், ஆனால், சேகருடன் தான் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை அவர் காண்பித்து தன்னையும், தனது குடும்பத்தையும் மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.

இதனால் அவரை பழிவாங்க திட்டமிட்டு, அவரது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக தாங்கள் வழக்கமாக சந்திக்கும் துறைமுகம் அருகே உள்ள விளையாட்டு மைதானம் அருகே சேகரை தான் அழைத்து சென்றதாகவும், பின்னர் அவரது கண்களை மூட செல்லி பெவி குயிக்கை எடுத்து சேகரின் கண்ணில் கொட்டியதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.

பின்னர், தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து சேகரின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாகவும் அந்த பெண் அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரித்துவருகின்றனர்.