நேத்து ராத்திரி பிக்பாஸ் வீட்டில் என்ன தான் நடந்தது! விஜே பார்வதிக்கும் கமருதினுக்கும் திருமணமா? மர்ம இரவு குறித்து குவியும் கேள்வி!



bigg-boss-tamil-season-9-vj-parvathi-kamrudeen-controve

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், போட்டியைத் தாண்டி ஒரு உணர்ச்சிப்பூர்வமான சம்பவம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. விஜே பார்வதி மற்றும் கமருதீன் இடையே நடந்ததாக கூறப்படும் நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இறுதிக்கட்டத்தை நோக்கி பிக் பாஸ் 9

74-வது நாளை எட்டியுள்ள பிக் பாஸ் தமிழ் 9 சீசன், பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் கிராண்ட் ஃபினாலேவை நோக்கி நகர்கிறது. கடந்த வாரம் ரம்யா மற்றும் வியானா வெளியேற்றப்பட்ட நிலையில், விஜே பாரு, அரோரா, கனி, கமருதீன், சபரி, விக்ரம், சாண்ட்ரா, அமித், கானா வினோத் உள்ளிட்ட போட்டியாளர்கள் இன்னும் போட்டியில் உள்ளனர்.

இதையும் படிங்க: Bigg Boss 9: குறும்படத்தை பார்த்ததும் தொங்கிய முகம்! சரமாறியாக தாக்கும் போட்டியாளர்கள்....

பாரு–கமருதீன் மீது குவியும் கவனம்

பிக் வீட்டில் தற்போது விஜே பார்வதி மற்றும் கமருதீன் மீது தான் ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனமும் குவிந்துள்ளது. ஜோடியாக செயல்படுவது, மற்ற போட்டியாளர்களை கலாய்ப்பது, விதிமுறைகளை மீறுவது என இருவரின் நடவடிக்கைகள் அடிக்கடி விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

திருமண சத்தியம் வைரல்

விஜே பார்வதி மற்றும் கமருதீன் பேசும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் சோகமாக இருக்கும் பார்வதியை சமாதானப்படுத்தும் கமருதீன், வெளியே சென்ற பிறகு என்ன நடந்தாலும் சேர்ந்து எதிர்கொள்வோம் என கூறி, திருமணம் செய்வதாக சத்தியம் செய்வது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்வதி, தன் அம்மா என்ன நினைப்பார் என்ற கவலையையே மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகிறார்.

நேற்று இரவு என்ன நடந்தது?

இந்த உரையாடலுக்குப் பிறகு, நேற்று இரவு பிக் வீட்டில் நடந்ததாக கூறப்படும் மர்ம சம்பவம் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. திடீரென நாய் குரைத்தது, நடு ராத்திரியில் வீட்டிற்கு போவதாக பார்வதி கூறியது போன்ற விஷயங்கள் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சம்பவங்கள் அனைத்தும் சேர்ந்து, பிக் பாஸ் வீட்டில் நடந்த மர்ம இரவு குறித்து ரசிகர்களிடையே பல்வேறு ஊகங்களை உருவாக்கியுள்ளது. உண்மை என்ன என்பது வரவிருக்கும் எபிசோடுகளில் வெளிவரும் வரை, இந்த விவகாரம் தொடர்ந்தும் விவாதமாகவே நீடிக்கும் என தெரிகிறது.

 

இதையும் படிங்க: என்னதான் பிரச்சனை... வெற்றியை கேக் வெட்டி கொண்டாடும் போது அதில் கலந்துகொள்ளாமல் சென்ற விராட் கோலி! சர்ச்சையை கிளப்பிய வீடியோ!