மார்கழி மாத கடைசி அமாவாசை... இன்று மறந்தும் கூட இந்த தவறுகளை செய்யாதீர்கள்!
மார்கழி மாதத்தின் கடைசி அமாவாசை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. பித்ருக்களை நினைத்து தர்ப்பணம், தான தருமங்கள் செய்ய ஏற்ற இந்த நாளில், சில செயல்களை முறையாகச் செய்ய வேண்டும் என்பதோடு, சில தவறுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்றும் சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.
அமாவாசை – பித்ருக்களுக்கு உரிய நாள்
விநாயகருக்கு சதுர்த்தி, முருகருக்கு சஷ்டி, பெருமாளுக்கு ஏகாதசி, அம்பிகைக்கு பௌர்ணமி இருப்பதைப் போல, பித்ருக்களுக்கு அமாவாசை முக்கியமான திதியாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து, படைத்து, எள்ளு கலந்த நீரால் தர்ப்பணம் செய்வது பித்ரு திருப்தி பெறும் வழியாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: சிவ பெருமானுக்கு உகந்த நாளான நவம்பர் 3ம் தேதி இப்படி விரதம் இருந்தால் செல்வ யோகம்! ஆபத்தை தடுத்து நிறுத்தும் விஷேஷ நாள்!
கோலம், மணி ஒலி – ஏன் தவிர்க்க வேண்டும்?
பொதுவாக தினமும் அதிகாலையில் வீடு சுத்தம் செய்து வாசலில் கோலம் போடுவது சிறந்த பலனைத் தரும். ஆனால் அமாவாசை தினத்தில், பித்ருக்கள் நம் இல்லத்திற்கு வருகை தருவதாக நம்பப்படுவதால், வாசலில் கோலம் போடக்கூடாது என்று பெரியோர்கள் கூறுகின்றனர். அதேபோல் பூஜையறையில் மணி ஒலிப்பதும், இரும்புப் பாத்திரங்களின் ஒலியும் பித்ருக்களின் வருகைக்கு இடையூறாக இருக்கும் என நம்பப்படுகிறது.
தர்ப்பணம் முடிந்த பின் செய்யலாம்
அமாவாசை தினத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து, காகங்களுக்கு அன்னமிட்ட பிறகு வாசலில் கோலம் போடுவதில் தவறில்லை. அல்லது அன்றைய தினம் முழுவதும் கோலம் போடாமல் இருப்பதும் ஏற்றதாகக் கருதப்படுகிறது. தர்ப்பணம் மற்றும் தானங்களால் முன்னோர்களின் பசி, தாகம் தீர்ந்து, குலம் செழிக்கும் என்பதும் சாஸ்திர நம்பிக்கையாக உள்ளது.
அமாவாசை நாளில் செய்யும் தர்ப்பணம் மற்றும் தான தருமங்கள், நம் முன்னோர்களின் ஆசீர்வாதத்தை பெற்றுத் தரும் என நம்பப்படுகிறது. எனவே, அந்த நாள் முழுவதும் தேவையற்ற ஒலிகள், கோலம் போன்றவற்றை தவிர்த்து, அமைதியுடனும் பக்தியுடனும் பித்ரு காரியங்களைச் செய்வதே அமாவாசை வழிபாடு முழுமை பெறும் வழியாக கருதப்படுகிறது.
-ndkf5.jpeg)