மகிழ்ச்சி செய்தி! உடனே நகை வாங்க கடைக்கு கிளம்புங்க....இன்றைய தங்கம் விலை நிலவரம்!



chennai-gold-silver-price-today-dec 19 -drop

சென்னையில் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்க விலைக்கு இன்று சிறிய இடைவேளை கிடைத்துள்ளது. நகை வாங்கத் திட்டமிட்டிருந்த பொதுமக்களுக்கு இந்த விலை குறைவு ஒரு நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது.

இன்றைய 22 கேரட் தங்க விலை

இன்று தங்க விலை குறைந்துள்ள நிலையில், 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.480 வரை குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ரூ.99,040க்கும், ஒரு கிராம் ரூ.12,380க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Chennai gold rate

24 கேரட் தங்கத்தில் சரிவு

இதேபோல், 24 கேரட் ஜூனியர் சங்கத் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் ரூ.12,505க்கும், ஒரு சவரன் ரூ.1,08,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: Breaking: வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை! கிடு கிடுவென 82 ஆயிரத்தை தொட்டது! அதிர்ச்சியில் பொதுமக்கள்...

வெள்ளி விலையிலும் மாற்றம்

வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.3 குறைந்துள்ளது. இதன் படி ஒரு கிராம் வெள்ளி ரூ.221க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,21,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மொத்தத்தில், சென்னை சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு, முதலீட்டாளர்கள் மற்றும் நகை வாங்குபவர்கள் மத்தியில் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

இதையும் படிங்க: Breaking: புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை! சவரனுக்கு 86 ஆயிரத்தை நெருங்கியது! கவலையில் நகை பிரியர்கள்.....