தமிழக மக்களே தயாரா.? முன்கூட்டியே ஆஜராகும் வருண பகவான்.. விவசாயிகள் மகிழ்ச்சி.!
பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு குளிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது. சூரியனின் கடும் தாக்கத்திலிருந்து மக்கள் தப்பிக்க உதவும் வகையில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்திற்கு பிறகே தொடங்கும் பருவமழை, இந்த ஆண்டு ஒரு வாரம் முன்பாகவே துவங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு மிகவும் சாதகமான செய்தியாகும், ஏனெனில் விதைப்பு பணிகள் முன்கூட்டியே துவங்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் நீர்நிலைகள் நிரம்பும் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
மே மாதத்தில் அக்னி நட்சத்திரம் காரணமாக கடும் வெப்பம் நிலவும் என்றாலும், அதன் தாக்கம் நீண்ட நாட்கள் நீடிக்காது என கூறப்படுகிறது.
மழை விரைவாக துவங்குவதால் வெப்பத்தின் தீவிரம் குறையும் வாய்ப்பு உள்ளது. இதனால் மக்கள் ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து ஒரு அளவு பாதுகாப்பைப் பெறலாம்.
இதையும் படிங்க: BREAKING: மழையின் தாக்கத்தால் உருவாகிறது புதிய புயல்! மீண்டும் வந்தது அலர்ட்....!!
இந்த முன்கூட்டிய பருவமழை, குடிநீர் தட்டுப்பாட்டை குறைக்கும் முக்கிய காரணியாக அமையும். நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் நீர் எனவே இந்த ஆண்டு பருவமழை மக்கள் மனதில் புதிய நம்பிக்கையை விதைக்கிறது. இந்த செய்தி, அதிகரித்து வரும் வெப்பநிலையால் அவதிப்படும் மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.