தமிழகம்

9 மாதத்தில் தமிழகத்தில் மட்டும் 20,000 சிறுமிகள் கர்ப்பம்! அதிர்ச்சி ரிப்போர்ட்

Summary:

20000 teen age girls

தமிழகத்தில் கடந்த 9 மாதத்தில் மட்டும் 18 வயதிற்கும் குறைவான 20000 சிறுமிகள் கர்ப்பமடைந்து இருப்பதாக பொது சுகாதார ஆணையத்தின் சார்பாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதத்திற்குள் 20000 சிறுமிகள் கற்பமாகி இருப்பதாக தமிழ்நாடு மகப்பேறு மற்றும் குழந்தைகள் துறையில் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்ப்பிணி பெண்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற இந்த ஆணையத்தில் பதிவு செய்துள்ளதன் மூலம் இந்த தகவல்கள் கிடைத்துள்ளன. 

இதில் 16 முதல் 18 வயதில் இருக்கும் அனைத்து சிறுமிகளும் திருமணம் ஆனவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.   பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக இருக்கும்பட்சத்தில் இந்த தகவல் அதிகாரிகளை மிகவும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இவர்கள் கருவை கலைப்பதற்கும் முன்வருவதில்லையாம். 

தமிழ்நாட்டில் இந்த வருடம் மட்டும் 1,636 குழந்தைகள் திருமணத்தை அரசு தடுத்து நிறுத்தி உள்ளதாக தம்ழிநாடு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த தகவல் மிகவும் அதிர்ச்சியாய் உள்ளது. 

தமிழ்நாடு சுகாதார துறை இயக்குநர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரி தரேஸ் அஹமது இதுபற்றி கூறுகையில் ‘16 முதல் 18 வரை உள்ள பதின்பருவ பெண்கள் அதிகமானோர் கர்ப்பம் தரித்துள்ளனர். இதில் அதிகமானவர்கள் திருமணமானவர்கள். இதன் மூலம் தமிழகத்தில் அதிகமான குழந்தைகள் திருமணம் நடந்துள்ளதுதெரிய வருகிறது. 
இப்படி கர்ப்பம் தரிக்கும் பதின்பருவத்தினர் குழந்தையை கலைக்க முன்வருதில்லை. 17 வயதில் ஒரு பெண்ணின் உடல் மற்றும் மனம் குழந்தையை பெற்றெடுக்க பக்குவம் அடைவதில்லை. மேலும் இப்படி குழந்தை பெற்றெடுக்கும் பெண்கள் உடல்ரீதியாக தொடர்ந்து சிக்கல்களை சந்திப்பார்கள்" என்று கூறியுள்ளார். 


Advertisement