மக்களே மகிழ்ச்சியான செய்தி!! இன்றில் இருந்து 2 ஆயிரம்!! ரேஷன் கார்டுக்கு ரூ 2,000 வழங்கும் பணி தொடங்கியது!!2000-for-ration-cards-corona-relief-fund-distribution-s

அரிசி பெரும் ரேஷன் அட்டைகளுக்கு கொரோனா நிவாரண நீதியான 4 ஆயிரத்தின் முதல் தவணை இன்றில் இருந்து வழங்கப்பட உள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தால் அரிசி பெரும் குடும்ப அட்டைகளுக்கு தலா 4 ஆயிரம் கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதன்படி திமுக வெற்றிபெற்று, ஸ்டாலின் முதல்வர் பதவி ஏற்றதும், கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையாக 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் கையெழுத்திட்டார்.

2000 corona relief fund

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரிசி பெரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 ஆயிரம் பெறுவதற்கான டோக்கன் கடந்த வாரம் முதல் வீடு வீடாக வழங்கப்பட்டுவந்தது. இந்நிலையில் இன்று முதல், முதல் கட்டமாக ரூ2,000 வழங்கும் பணி தொடங்குகிறது. கோவையில் இன்று அமைச்சர் அர. சக்கரபாணி இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.