தமிழகம்

காதலனின் ஆசை வார்த்தைகளை நம்பி சென்ற சிறுமி! தனி வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி! துடித்துபோன பெற்றோர்!!

Summary:

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆனந்தபாலம் என்ற பகுதியை சேர்ந்தவர் ஆல்டோ மைக்கேல்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆனந்தபாலம் என்ற பகுதியை சேர்ந்தவர் ஆல்டோ மைக்கேல். இவருக்கு குளச்சல் அருகே உள்ள வாணியங்குடி பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில் ஆல்டோ திருமணம் செய்து கொள்வதாக சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை தனியாக வீட்டை விட்டு வரக் கூறியுள்ளார்.

பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த அந்த சிறுமியை ஆல்டோ நாகர்கோவில் அருகில் உலக்கை அருவி பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.  அங்கு அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த நிலையில் வெளியே சென்ற தனது மகள் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் துடிதுடித்து போன அவரது பெற்றோர் பல இடங்களிலும் தேடியுள்ளனர். 

பின்னர் கிடைக்காததால் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் சிறுமி எங்கு இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் அங்கு விரைந்த போலீசார் ஆல்டோ மைக்கேலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் அவருக்கு அனைத்து உதவிகளையும் செய்து துணையாக இருந்த அவரது நண்பர்களான சூர்யா, கிஷோர் குமார், காட்வின் மேஸ்வாக்  ஆகியோரையும் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement